Facebook Tricks

1)How to Send Free SMS via Facebook
2)How to Send Profile Pics in Facebook Chat
3)How To Download Facebook or Youtube Videos Without Any Tools
etc...

Computer Tricks

1)Computer Maintenance tips for keeping it healthy
2)Top 20 Tips To Keep Your System Faster
3)Increase your RAM by Increasing system speed
etc...

Mobile Tricks

1)15 General Tips and Tricks for Nokia Users
2)Save your Battery Charge
3)Play all file format in your mobile using core player
etc...

2012 Antivirus Softwares

1)Full Version Panda Internet Security 2012 with Serial Key
2)Download Bitdefender Total Security 2012 Beta
3)Download Avast 6 Home Edition 1 Year License Serial Key
etc...

Firefox Tricks

1)Top 10 Firefox Hacks and Tricks
2)Best Funny Firefox Tricks
3)Ultimate List Of Firefox 4 Tips; Tricks And Hacks You Should Learn Right Now
etc...

Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Wednesday, 7 March 2012

சாதனை செய்யும் பெண்மணிக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது-ஜெ. அறிவிப்பு

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ‘அவ்வையார் விருது’ என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இவ்விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்நாளை பெண்கள் உரித்தாக்குகின்றனர். இந்த நன்னாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் என்பவள் சக்தியின் உருவம். “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா” என்று பெண்ணின் பெருமையை போற்றிப் பாடியிருக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார்.

“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள், மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ” என்று கைம்பெண் மணத்தை வலியுறுத்தினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார் ராசாராம் மோகன் ராய். பெண்களை அடிமைப்படுத்தியதனால் தான் பாரத நாடு முன்னேறவில்லை என்பதை உணர்ந்து, பெண் விடுதலைக்காக திரு.வி.க. அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் பாடுபட்டனர்.

உலகத்தில் எந்த நாடும் போற்றாத அளவுக்கு பெண்ணைப் போற்றிடும் நாடு நம் பாரத நாடு. பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நாட்டைத் தாய்த் திருநாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், நலம் பயக்கும் நதிகளுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி என பெண்பால் பெயர்களை வைத்தும் நாம் மகிழ்கிறோம்.

வாழ்க்கை என்னும் தேர் ஓட வேண்டுமென்றால் இரு சக்கரங்கள் தேவை என்பதை சமுதாயம் உணர வேண்டும். நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு பெண்கள் என்று இருக்கும் நிலையில், பெண்ணினம் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது. பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பவர்கள், தாய் பெண் ஈன்றால் முகம் சுளிக்கிறார்கள்.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களவையில் நிறைவேற்ற முடியாததால் சட்டமாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்துத் தந்த சமதர்ம சமுதாயக் கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவை பெற்று, அதன் மூலம் வேலை வாய்ப்பை எய்தி, பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில், மகளிர் முன்னேற்றத்திற்கான பல நல்ல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப் படை மற்றும் அனைத்து மகளிர் காவல் படை, தாயின் முதலெழுத்தை குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல், மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “குடிமகள்” என்னும் சொல்லை பயன்படுத்துதல், வீர தீர பெண்மணிக்கு “கல்பனா சாவ்லா விருது” என பல்வேறு மகளிர் நலன் பயக்கும், பெண்மைக்கு பெருமை சேர்க்கும் திட்டங்கள் எனது முந்தைய ஆட்சி காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், 4 கிராம் தங்கக் காசும் தற்போது எனது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கான உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி, 4 கிராம் தங்கக் காசு வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

சமையலறையில் நாளும் உழலும் மகளிரின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றை எனது அரசு வழங்கி வருகிறது. இளம் பெண்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா ‘சானிடரி நாப்கின்’ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ‘அவ்வையார் விருது’ என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இவ்விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும்.

சேயாக, தமக்கையாக, தாரமாக, தாயாக பாரினில் பெண்கள் படைக்கும் பாத்திரங்கள் மகத்தானவை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதோடு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி, ஒவ்வொரு பெண்ணும் தடைகளைத் தகர்த்தெறிந்து, தன்னம்பிக்கையைத் தன்வசப்படுத்தி, எதற்கும் அஞ்சாமல் வெற்றி பெற வேண்டும். மண் வளத்தைக் காப்பது போல், வன வளத்தைக் காப்பது போல், நீர் வளத்தைக் காப்பது போல், பெண் வளமும், பெண் உரிமையும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

“பெண்களின் உரிமை பாரதத்தின் வலிமை” என்பதை மனதில் வைத்து, “ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைக்கிணங்க, பெண்ணுரிமை ஓங்கட்டும்! பெண்ணடிமை ஒழியட்டும்! என்று நெஞ்சார வாழ்த்தி, வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றி, இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் பெண்கள் உயர்ந்து விளங்கிட, புதிய உலகம் படைத்திட, எழுச்சியுடன் நமது கடமைகளை செவ்வனே ஆற்றுவோம் என்று சூளுரைத்து, எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50,000 பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தூத்துக்குடி மாவட்டத்திலும் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே இளையரசனேந்தல் ரோட்டில் பறக்கும் படை துணை தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொப்பையா, ஞானசிகாமணி, போலீசார் மணிமேகலா, சேவியர், மகேந்திரன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த ஒரு காரை பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது அந்த காரில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்புராஜ் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவேங்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இடைத்தேர்தல்: சங்கரன்கோவிலில் இதுவரை ரூ.38.21 லட்சம் பறிமுதல்

சங்கரன்கோவில்: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சங்கரன்கோவிலில் இதுவரை ரூ.38.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுக்கள் முலம் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு சங்கரன்கோவில் தாலுகா நடுவப்பட்டியில் விளாத்திகுளம் துணை தாசில்தார் சேதுராமன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாருதி ஓம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 21ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதே போன்று அய்யனேரி கிராமத்தில் கோவில்பட்டி துணை தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சு்ப்புராஜ் என்பவரது வாகனத்தில் ஆவணங்கள் இன்றி ரூ.50,000 எடுத்து சென்றது தெரிய வந்தது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு தனி தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவில் தேமுதிக பிரச்சார விளம்பரங்கள் அடங்கிய ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 5 மதிப்புள்ள போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டன. சங்கரன்கோவில் தொகுதியில் இதுவரை ரொக்கமாக ரூ.38 லட்சத்து 21 ஆயிரத்து 760ம், ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 336 மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 
Related Posts Plugin for WordPress, Blogger...